தீபத்திருவிழாவின் 8ஆம் நாள் வெட்டும்குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்கி தரும் திருதலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோரும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ஆம் நாளான இன்று காலையில் விநாயகர் ,சந்திரசேகரர் வெட்டும்குதிரையில் மாடவீதியுலா வந்தனர்.
முன்னதாக விநாயகர் மற்றும் சந்திரசேகர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடந்து விநாயகர் சந்திரசேகரர் வெட்டும் குதிரை வாகனத்தில் மாடவீதியுலா வந்தனர். ஆயிரக்கண்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணி அளவில் மழை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Comment