சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வள்ளி திருமண காட்சி...
புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி திருமண காட்சி, யானையுடன் வள்ளியை பயமுறுத்தும் காட்சி தத்ரூபமாக நடத்தி காட்டி திருமணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி முருகன் திருமணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும் அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும் அதனைத் தொடர்ந்து முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.
யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை எடுத்து மாலை மாற்றும் வைபவம் மகா தீபாரதனை உள்ளிட்டவைய் செய்யப்பட்டு வள்ளி திருமணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment