பழனி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா....
பழனி லிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி ராமநாதன் நகரில் காரிய நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நரசிம்மர் கோயில் வளாகத்தில் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர், ஐஸ்வர்ய நந்தி தேவர், ஐஸ்வர்ய நாயகி, பஞ்சமுக கணபதி சன்னதிகள் அமைப்பதற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து குடமுழுக்கு இன்று விழா நடைபெற்றது.
முன்னதாக கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்கப் பட்டன. அதனைத் தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்தது கொண்டுவரப்பட்ட தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு விழா நிறைவடைந்தது அடுத்து திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்கள் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர்- ஐஸ்வர்ய நாயகியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அறுந்தினர்.
Leave a Comment