திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை...


திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை 3ஆம் நாள் திருவிழா உற்சவர் சண்முகப் பெருமான் நீல நிற பட்டு உடுத்தி சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனை நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி & புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை 3-ஆம் நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மலைக் கோவிலில் மூலவர் முருகப் பெருமான் பட்டு அங்க வஸ்திரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமான் அவருக்கு  பால், பழம், தயிர், பஞ்சாமிர்தம், திருநீர், இளநீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரம் சிறப்பு நீல நிற பட்டு உடுத்தி, சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது,

 இதனைத் தொடர்ந்து இலட்சார்ச்சனை யில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி விரதம் இருந்து வரிசையில் சென்று  சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment