தேனி அருள்மிகு ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் கந்த சஷ்டி விழா...


கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருக பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வணங்கி சென்றனர்.

தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் மூன்றாம் நாளான இன்று முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். முன்னதாக மூலவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பொன்னமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பின்னர் ஏராளமான பொதுமக்கள் கூடி கந்த சஷ்டி பாராயணம் பாடி வழிபாடு நடத்தினர்.

பின்னர் வேலுடன் காட்சி தந்த உற்சவர் முருகப்பெருமானுக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர் மாலைகளாலும் எலுமிச்சை பழம் மாலைகள் ஆளும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருக பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.



Leave a Comment