ராஜராஜ சோழனுக்கு 1038 ஆம் ஆண்டு சதய விழா... தஞ்சை பெரிய கோவில் பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம்...


தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழனுக்கு 1038 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி தமிழ் முறைப்படி தேவாரம் திருமுறை பாடி பெருவுடையாருக்கு 48 வகையான பேரஅபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

தஞ்சை ஆண்ட மாமன்னர் ராஜராஜன் சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் நாட்டியம் கலை நிகழ்ச்சி பட்டிமன்றம் திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 விதியில் நடைபெற்று பின்னர் தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் திருவீதி உலா வந்து அடைத்தது.

பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால் மஞ்சள் சந்தனம் திருநீர் தேன் அரிசிமாவு பொடி நெய் தயிர் பன்னீர் எழுமிச்சை பழச்சாறு திரவிய பொடி பஞ்சாமிர்தம் மூலிகைப் பொடிகள் உள்ளிட்ட 48 வகையான பேரஅபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.4



Leave a Comment