பழனியில் நவராத்திரி விரதம் முடிந்து மலைக்கோயில் திரும்பிய புவனேஸ்வரி அம்மன்...


பழனியில் நவராத்திரி விரதம் முடிந்து புவனேஸ்வரி அம்மன் மலைக்கோயில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

சூரனை வதம் செய்யும் நிகழ்வுக்காக  மலைமிருந்து கீழே வந்த புவனேஸ்வரி அம்மன் கொழுவில் அமர்ந்தார். நவராத்திரி விழா நிறைவு நாளில் புவனேஸ்வரி அம்மன் மீண்டும் மலை மீது செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புலிப்பாணி ஆசிரமத்தில் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புவனேஸ்வரி அம்மனினை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பல்லக்கில் வைத்து மலைக் கோயிலுக்கு ஊர்வலமாக புவனேஸ்வரி அம்மனே அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.



Leave a Comment