ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி அம்மன்....
நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி அம்மனுக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம் என ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக தேனி பத்திரகாளி அம்மன் கோயிலில் உற்சவர் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தந்தார்.
முன்னதாக கோயில் முழுவதும் வண்ண விளக்கங்களால் ஜொலிக்கப்பட்டு உற்சவர் அம்மனை வண்ண பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சரஸ்வதி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார். மேலும் ரூபாய் நோட்டுகளால் மற்றும் காசு மாலைகளால் சரஸ்வதி அம்மனுக்கு அலங்காரம் செய்து பணமழை பொழிவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சரஸ்வதி அம்மனை வணங்கிச் சென்றனர். அதன் பின்னர் சிறுவர் சிறுமிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திரக்கல்யாணம் வைபவத்தை தத்ரூபமாக நடித்து காட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Leave a Comment