கல்ப விருட்ச வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்...


திருப்பதி ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் நான்காம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ராஜ மன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

சொர்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தருவது கல்ப விருட்ச மரம். அது போன்று கலியுகத்தில் தனது பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ராஜமன்னார் அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெகு விமர்சியாக நடந்த இந்த  சுவாமி வீதி உலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தன.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் வந்தார்கள். லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர்.



Leave a Comment