தேனி ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்...
தேனி அருகே நாகலாபுரம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஶ்ரீ செளந்தரராஜ பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அமர்ந்திருக்கும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் பெருமாளுக்கு பால் தயிர் சந்தனம் தேன் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வண்ண பட்டுடுத்தியும் உற்சவர் பெருமாளுக்கு வஸ்திரம் கட்டி ஆபரணங்கள் அணிவித்து வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் பெருமாளுக்கு சோடாச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர தீபாராதனை காடடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
Leave a Comment