மந்தை அம்மன் கோவில் திருவிழா... பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா...


மூன்று நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத மந்தை அம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து உற்சாக வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரபுரம் பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு மந்தை அம்மன் கோவின் புரட்டாசி மாத 3 நாள் திருவிழாவிற்கின சாட்டுதல் கடந்த மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற நிலையில் கோவில் திருவிழாவின் முதல் நாளான இன்று கோவிலிலிரந்து மக்கள் திரளாக கீழே உள்ள தெவேந்திரபுரம் கிராமத்தில் இருந்து பெரியகுளம் பகுதியில் உள்ள வராக நதி ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு மலர்களால் மந்தை அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலையை எடுத்து பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளில் அரண்மனை தெரு புதிய பேருந்து நிலையம் வி ஆர் பி  தெரு உள்ளி தெருக்களின் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.    

அலங்கரிக்கப்பட்ட மந்தை அம்மனின் வீதி உலாவின் போது 1000த்திற்கும்  மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து தங்கள் வீடுகளில் வைக்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு பெரியகுளம் வடகரை  பகுதியில் வீதி உலாவாக இரவு முழுவதும் சுற்றி வந்து பின்பு மந்தை அம்மன் கோவிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரியையும்  வைத்து பெண்கள் வழிபட்டனர்.

மந்தை அம்மன் கோவில் திருவிழாவில் நிகழ்ச்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இரவில் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



Leave a Comment