திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமி


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் இருந்து  எழுந்தருளினார். பின்னர்  ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.  108 வைணவ தலங்களில் கருடவாகனத்தில் சுவாமி எழுந்தருள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த 22 ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாள் கருட சேவை காண முடியாத பக்தர்கள் புரட்டாசி மாத பவுர்ணமியான இன்று அதிக அளவில் பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி  அருள்பாலித்தார்.

கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment