சிதம்பரம் கோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலம்....


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணம், பூரச்சலங்கை விழா விழாக்கள் கொடியேற்றுடன் தொடங்கியது. சிதம்பரம் திருத்தலத்தில், ஸ்ரீசிவகாம சுந்தரி அன்னைக்கு, ஆண்டுதோறும் ஐப்பசி பூர உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 17ம் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளுக்கு கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை திருத்தேர் உத்ஸவம் நடக்கிறது. 12ம் தேதி மாலையில் பட்டு வாங்கும் உத்ஸவமும், பூரசலங்கை உத்ஸவமும் மறுநாள் 13ம் தேதி காலையில் தபசு உத்ஸவக் கோலத்திலும் அம்பாள் வீதியுலா வரும் வைபவம் நடைபெறுகிறது. அன்றைய இரவு, ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்ஸவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஐப்பசி திருக்கல்யாணம், பூரச்சலங்கை முதலான விழாக்களையொட்டி தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள். தினமும் பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் ஆகியன நடைபெறும்.



Leave a Comment