தீர்த்த வாரியுடன் நிறைவு பெற்ற திருமலை பிரம்மோற்சவம்....


தீர்த்த வாரியுடன் நிறைவு பெற்ற திருமலை பிரம்மோற்சவம். ஸ்ரீவாரி புஷ்கரணி திருக்குளத்தில் நீராடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.


திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் ஆந்திர பிரமோற்சவம் கடந்த பதினெட்டாம் தேதி ஏற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் உற்சவம் மூர்த்தியான மலையைப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் ஆலய மாட வீதிகளில்  வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக  உற்சவ மூர்த்திகளான உபய தேவர்களுடன் கூடிய மலையப்பர் மற்றும் ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரம் மாட வீதிகளில் வலமாக  எடுத்து வந்து  வராக சுவாமி ஆலய முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால் தயிர் தேன் சந்தனம் போன்ற பல்வேறு நறுமண திரவியங்களுடன் ஆன ஸனபன  திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுதர்சன சக்கரத்தாழ்வார் உற்சவ மூர்த்தியை ஆலய  திருக்குளத்தில் எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தி மூன்று முறை மூழ்கச் செய்து தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்குளத்தின் நான்கு புறமும் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை சொல்லியபடி திருக்குளத்தில் மூழ்கி நீராடினர் . அந்த நிகழ்வுடன் திருமலை ஆலய சால கட்ல பிரம்மோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.



Leave a Comment