விவசாயம் செய்யும் விநாயகர் புல்லட்டில் அமர்ந்த விநாயகர்...


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விவசாயம் செய்யும் விநாயகர் புல்லட்டில் அமர்ந்த விநாயகர் என அற்புதமான சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார் ...

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான விநாயகர் சிலைகள் கடந்த இரண்டு மாதங்களாக தயார் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி ஆன வீதி உலா வந்தது.

 விநாயகர் விவசாயத்திற்கு உரம் போடுவது உரம் போடுவது போலவும், புல்லட்டில் விநாயகர் வலம் வருவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது

ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார்  மழையிலும் இருபறமும் பொதுமக்கள் கூடி நின்று விநாயகரை வழிபட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வனத்தில் பங்கேற்றனர் .

விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவரின் பெயரில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3 டிஎஸ்பிகள் 10 ஆய்வாளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Leave a Comment