திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்ற கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்....


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதனையொட்டி  இன்று நித்ய பூஜைகளுக்கு பிறகு  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ( கோயிலை சுத்தம் செய்யும் ) பணி நடைபெற்றது. காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

வழக்கமாக ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆணிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.இதில் மூலவர் கருவரையில் பட்டு துணியில் மூடிய பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்து பச்சைக் கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,  திருச்சூர்ணம் உள்ளிட்ட மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி செயல் அதிகாரி தர்மா ரெட்டி, துணை செயல் அதிகாரி லோகநாதம், முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.



Leave a Comment