திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தி பக்தர்களுக்கு அருள்...


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார்.

 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாவில்  8-ம் நாள் திருவிழாவான இன்று பச்சை சாத்தி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், ஆறு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பச்சை சாத்தியை முன்னிட்டு  சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு பால், தயிர், சந்தணம்,

தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட  ,   16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.   அலங்கார தீபாரனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பச்சைக் கடைசல் சப்பரத்தில்  சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் பச்சை  சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட் பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பச்சை  வண்ண மரிக்கொலுந்து மலர்களை தூவி அரோகரா பக்தி கோசங்கள் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ம் தேதி  நடைபெறுகிறது.



Leave a Comment