21 அடி உயர கருட பகவான் சிலைக்கு கும்பாபிஷேகம்..... அற்புதமான வீடியோ காட்சி...
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் 21 அடி உயர கருட பகவான் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் பரிவார மூர்த்திகளாகவும் பெரிய திருவடியாகவும் விளங்கும் கருட பகவானுக்கு 21 அடி உயரம் உள்ள விஸ்வரூப கருட பகவான் தும்பிகை ஆழ்வார் மற்றும் நவக்கிரகங்கள் மிகவும் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மகா கும்பாபிஷேகம் இன்றுகாலை நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பகவத் அணுக்கரை, ஆச்சார்ய வர்ணம், அங்குரார்பணம், அக்னி பூஜை, வாஸ்து சாந்தி, திருமஞ்சனம் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்ற பின்பு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நேற்று இரவு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இன்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சம்ரோஷணம், பிரம்மபூஜையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பு புதிதாக கட்டப்பட்ட 21 அடி உயர விஸ்வரூப கருட பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை தீர்த்த பிரசாத விநியோகங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.v
Leave a Comment