பிரித்தியங்கரா காளிக்கு நள்ளிரவில் காளிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பக்தர்கள்...
மகா பிரத்தியங்கிரா காளி ஜென்மாஷ்டமி தினத்தில் அவதரித்த திருநாள் என்பதால் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட மகா பிரித்திங்கரா காளி ஆலயத்தில் ஜென்மாஷ்டமி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படும். அதன்படி ஆலய பீடாதிபதி நடத்துர் ஜனார்த்தன சுவாமிகள் மற்றும் இளைய பிடாதிபதி வரத தேசிகன் தலைமையில் காலை காலை முதல் காளிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு பைரவ பலி பூஜை மற்றும் குருதி பூஜைகள் நிறைவடைந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் பிரித்தியங்கரா காளிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்படும் பட்டாசு சத்தங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் பிரித்யங்கரா காளிக்கு ஜெ! ஜெ! என பல்லாயிரக்கணக்கான மக்கள் கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் குழந்தைகள் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
4
மேலும் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அஷ்டமி தினத்தில் மாதம்தோறும் நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது இந்த பூஜைகளில் கலந்து கொள்வதால் பில்லி சூனியம் ஏவல் மற்றும் தீய சக்திகளிடமிருந்து நம்மை அம்மன் பாதுகாப்பால் என்பதும் எதிரிகளின் சூழ்ச்சி மற்றும் தடைகள் தகர்த்தெறிந்து அனைத்திலும் வெற்றி பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன் நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் மாதம் தோறும் மற்றும் வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் ஜென்ம அஷ்டமி தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூஜை மற்றும் யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
Leave a Comment