வெள்ளி யானை வாகனத்தில் திருச்செந்தூர் சுவாமி குமரவிடங்க பெருமான்...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா 4-வது நாளான இன்று சுவாமி குமரவிடங்க பெருமாள் வெள்ளி யான வாகனத்திலும், வள்ளியம்மாள் வெள்ளி சரப வாகனத்திலும், எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
4-ம் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது.
Leave a Comment