ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா...
புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. உறி அடித்தும், கண்ணன், ராதை வேடமணிந்தும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.
தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் தேய்பிறையின் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்கிறது. புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கோவிந்தராஜா பெருமாளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெண்ணெய் தாழியுடன் கிருஷ்ண பெருமாள் உட்புறபாடு நடைபெற்று கோவிலின் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து கிருஷ்ணனை வரவேற்கும் வகையில் பூக்கள் மற்றும் வெண்ணையால் நிரப்பட்ட உரிய அங்கிருந்த பக்தர்கள் உடைக்க கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பெண்கள், கண்ணன், ராதை வேடமிட்ட குழந்தைகளுடன் பெருமாளை வழிபட்டு சென்றனர். கோவிந்தா கோவிந்தா என பாராயணம் பாடியும் கோவிந்தராஜ பெருமாளை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.
Leave a Comment