திருமலையில் கைசிக துவாதசி விழா


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழாவை வெகுவிமர்சையாக நடைபெற்றது. உக்ர சீனிவாசமூர்த்தியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகா விஷ்ணு வரும் ஆஷாட மாதத்தில் ஏகாதசி அன்று நித்திரைக்கு செல்ல இருப்பதால் கார்த்திகை மாதம் வரக் கூடிய கைசிக துவாதசி அன்று நித்திரையில் இருந்து மகா விஷ்ணு கண் விழித்து எழக்கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகா விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் சன்னதியில் இருக்க கூடிய உக்ர சீனிவாச மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சூரிய உதயத்திற்கு முன்னதாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.



Leave a Comment