வீட்டில் வரலட்சுமி நோன்பு... அற்புத அலங்காரம்...
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கலர் காகிதங்களால் கோவில் போன்று அம்மனை அலங்காரம் செய்து சுமங்கலி பெண்களை அழைத்து சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். போரூரை சேர்ந்த லட்சுமி என்பவர் வண்ண, வண்ண காகிதங்களை மாலையாகவும், அம்மனையும் அலங்கரித்து வண்ண, வண்ண காகிதங்களை பூக்கள் போன்று வடிவமைத்து தோரணமாக தொங்கவிட்டு தனது வீட்டில் வரலட்சுமி நோன்பை கொண்டாடியுள்ளார்.
இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து சிறப்பு பூஜைகள் செய்து அவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக போரூரில் வசித்து வரும் நிலையில் மிகுந்த தெய்வ பக்தி உடைய இவர் வீட்டில் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் வண்ண, வண்ண காகிதங்களை அலங்கரிக்கும் வேலையை கற்று கொண்டு தற்போது வண்ண, வண்ண காகிதங்களால் அம்மனை செய்து அதற்கு ஏற்ப காகிதங்களாலேயே கோவில் போல் அலங்கரித்து வரலட்சுமி நோன்பு கொண்டாடியது அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Comment