16 அடி உயர லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 7 மணி நேரம் இடைவிடாமல் அபிஷேகம்...


உலக நன்மை வேண்டி புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற  16 அடி உயர லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 7 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற அபிஷேகம்.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவில் வளாகத்தின் அருகே  அமைந்துள்ள  16 அடி உயர லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 7 மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் 108 கிலோ சந்தனம், விபூதி மற்றும் 108 லிட்டர் தேன், தயிர், பால் மற்றும் கரும்புச்சாறு இளநீர் உட்பட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு காலை 10 மணிக்கு துவங்கிய அபிஷேகம் மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து 7 மணி நேரம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் சகல விதமான நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அபிஷேகம் குறித்து ஆலய பீடாதிபதி நடத்துர் ஜனார்த்தன சுவாமிகள் கூறுகையில்: புதுச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலேயே உயரமான லட்சுமி நரசிம்மரின் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இங்கு அமையப்பெற்ற லட்சுமி நரசிம்மரின் சிறப்பு என்னவென்றால் 108  திவ்ய தேசங்களில் 54 திவ்ய தேசங்களுக்கு இங்கு அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் விஜயம் புரிந்து தற்போது இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்என்றும் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் மகா அபிஷேகத்தை பக்தர்கள் நேரில் கண்டால் திருமண தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நோய் நொடிகள் நீங்கும் எனவே பக்தர்கள் அனைவரும் சுவாதி நட்சத்திர அபிஷேகத்தில் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்து லட்சுமி நரசிம்மரின் அருளைப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



Leave a Comment