பக்தர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்ட பிடிகாசுகள்... ராசிபுரத்தில் வினோதம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோவில் அருகே 33 அடி ஸ்ரீ சண்டிகருப்பசாமி கோயில், ஸ்ரீ நாககன்னி கோவில் அமைந்துள்ளது.இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிடிகாசு வழங்குவது வழக்கம். பக்தர்கள் பிடிகாசு வாங்கினால் செல்வம் பெருகும், தீராத கடன்களில் இருந்து விடுபடவும், செய்யும் தொழில் மேன்மை அடையும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் 19ம் ஆண்டு ஆடி அமாவாசை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்த பிடிக்காசு வாங்கும் நிகழ்ச்சியில் 108 மூலிகைகளை கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கருப்புசாமி மாதிரி வேடம் அணிந்த ஒருவர் பக்தர்களுக்கு அள்ளி அள்ளி பிடிகாசுகளை வழங்கினார், பக்தர்கள் பய பக்தியுடன் பிடிக்காசுகளை வாங்கி சென்றனர் இதில் நாமக்கல், சேலம், ஆத்தூர், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Comment