ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா...


சங்கராபுரம் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க வெகுவிமர்சையாக நடைபெற்ற திருத்தேர் திருவிழா;ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பூட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அறநிலைத்துறை சார்பில் திருத்தேர் திருவிழா  கடந்த ஜீலை 29-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்தல் மற்றும் சாமி திருவீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் திருத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு மேளதாளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.தேரோடும் வீதிகள் வழியாக இந்த திருத்தேரினை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த திருத்தேர் திருவிழாவில் பூட்டை கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர், மேலும் பக்தர்களுக்கு வெயில் காலம் என்பதால் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment