ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு 3508 மஞ்சள் குட அபிஷேகம்...


உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு 3508 மஞ்சள் குட அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான மகா பிரத்தியங்கிரா காளிக்கு ஆடி மாதத்தில் மஞ்சள் குட அபிஷேகம் நடத்தினால் தான் கேட்கும் அருளை விட மேலும் அருளை வாரி வழங்குவாள் என்ற ஐதீகம் பக்தர்களுக்கு உண்டு.

அதன்படி ஆண்டுதோறும் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72 அடி ஸ்ரீ மகா பிரத்தியங்கரா காளிக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு மஞ்சள் கூட அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். புதுச்சேரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவில் நுழைவாயில் முன்பு ஒன்று திரண்ட 3500-க்கும் மேற்பட்ட பெண்கள் சக்தி கரகம் ஏந்தி அலகு குத்தி மஞ்சள் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

மஞ்சள் கூட ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன் அங்கு அருள்மிகு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளி மற்றும் 16 அடி உயரம் கொண்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கும் மஞ்சள் கூட அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மஞ்சள் குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள் இதற்காக பக்தர்கள் சக்தி கரகம் ஏந்தி அழகு புத்தி மஞ்சள் குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர் சென்னை புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மகா பிரத்தியங்கரா காளி கோவில் சன்னதி அடைந்தது.

அங்கு ஸ்ரீமத் நடாதூர் ஜனார்த்தனன் சுவாமிகள் தலைமையில் அம்மனுக்கு மஞ்சள் கூட அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, மொரட்டாண்டி வானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் குடம் சுமந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.



Leave a Comment