குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா...
உலக தசரா புகழ் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் கோவில் கொடை விழா பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் கோவில் கொடை விழா நிகழ்ச்சி மாக்காப்புடன் தீபாரதனை உடன் இன்று காலை தொடங்கியது. இதனை அடுத்து இன்று மதியம் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நய்யாண்டிமேளம், செண்டை மேளம், தப்பட்டை ,வில்லிசை, மற்றும் கனியான் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க அம்மன் கும்பம் சுமந்து கோவில் வளாகம் சுற்றி வந்து மகாமண்டபத்தில் ஆடியது. இதனை அடுத்து கும்பம் எடுத்து வீதி உலா வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment