செவ்வாய் கிரகத்துடன் எந்த கிரகம் சேர்ந்தால் என்ன நன்மை.....
ராசியில் செவ்வாய் கிரகத்துடன் சூரியன் சேர்ந்து இருந்தால் நிறைகுறைகள் சில இருக்கும். உடல் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்களைச் செய்வார்கள். அடிக்கடி தொழில் மாற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் யோகம் உண்டு. இவர்கள் உஷ்ணதேக அமைப்பு உடையவர்களாக இருப்பர்.
செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் அவர்கள் கைராசி மிக்கவர்களாக இருப்பார்கள். தாயார் வழியில் சொத்து சேரும். வாக்குபலிதம் உள்ளவர்களாக இருப்பர். உணர்ச்சிவசப்பட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். நண்பர்களால் அவ்வப்போது பிரச்னைகளை சந்திப்பார்கள்.
செவ்வாய் கிரகத்துடன் புதன் கிரகம் சேர்ந்திருந்தால் விதண்டாவாதம், கூடாநட்பு உண்டாகும். ஸ்திரத்தன்மை அற்றவராக இருப்பார். இவர்களின் உடலில் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஏற்படும். முன்யோசனை இல்லாமல் எதையும் செய்வார்கள்.
இதேபோல செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சாதக, பாதகங்கள் உண்டு. கலைத்துறையில் இவர்களின் ஜீவனம் அமையும். சாகசச் செயல்களில் வெற்றி அடைவார்கள். முரட்டு பிடிவாதம் அதிகம் இருக்கும். காம இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். தகாத சேர்க்கைகள், பழக்கவழக்கங்கள் இருக்கும்.
செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் எதிலும் நிபுணத்துவம் உண்டாகும். வாக்குபலிதம், சாஸ்திர ஆராய்ச்சி, ஜோதிடம், குறி சொல்லுதல், ஆசிரியர் பணி, வக்கீல், நிதி நீதித்துறையில் ஜீவனம் அமையும். பிராமண நேசம், விவசாய நிலங்கள் சொத்து சேர்க்கை உண்டு.
செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் இரும்பு, இயந்திரங்கள் சம்பந்தமான வகையில் ஜீவனம் அமையும். ஏதாவது வழக்கு, பஞ்சாயத்து என்று அலைந்து கொண்டிருப்பார்கள். முரண்பாடான கருத்துகள் இருக்கும். உடல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். சங்கீத ரசனை இருக்கும்.
செவ்வாய் கிரகத்துடன் ராகு சேர்ந்திருந்தால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் செய்வார்கள். சினிமா துறையில் ஜீவனம் அமையும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். தகாத சேர்க்கை, நீச்ச பழக்க வழக்கங்கள் உண்டாகும்.
செவ்வாயுடன் கேது சேர்ந்திருந்தால் மருத்துவம், ரசாயனம் சம்பந்தமாக படிப்பு, ஜீவனம் அமையும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உண்டாகும். உற்சாகமாக செயல்பட்டாலும் மனச்சோர்வு அடைவார்கள். விவசாய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.
Leave a Comment