ஆடி வெள்ளியில் அம்மனை துதிக்க பாடல்…..


ஆடி வெள்ளியில் அம்மனை துதிக்க பாடல்…..

                               பல்லவி

        ஆடி வெள்ளியில் அம்பிகையே உனைப்
        பாடித்துதித்திடும் எனக்கருள் புரிவாய்

                            அனுபல்லவி

        கோடி வினை தீர்க்கும் கேசவன் சோதரியே
        ஆடிய பாதமவன் பங்கிலுறை சங்கரியே

                                சரணம்

        நாடியுன் பதம் பணியும் நல்லடியார் குறை தீர்க்கும்
        ஈடிணையில்லாத திரிபுர சுந்தரியே           
        வேடிக்கையாக மூவுலகும் காக்கும்       
        வாடிக்கையுடையவளே  வடிவுடைநாயகியே

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன. தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.



Leave a Comment