ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்த புஷ்பயாகம், காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல், புஷ்ப யாகம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு வருடத்தில் வரும் கார்த்திகை மாத ஸ்ராவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, பல வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 டன் மலர்கள், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் மலர்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 டன் மலர்கள் என மொத்தம் 9 டன் மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.
Leave a Comment