ஆடி பிறப்பு முதல் கடைசி வரை... முக்கிய நாட்களும் அதன் சிறப்புகளும்!


ஆடி பிறப்பு

ஆடியின் முதல் நாளான இன்று, விசேஷமாக இருக்கும். குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் . ஆடி பிறந்த அன்று, புதுமண தம்பதிகளை தாய் வீட்டுக்கு அழைக்கப்பட்டு புத்தாடையோடு, பெரிய விருந்தே  வழங்கப்படும். இதில் தேங்காய் பாலில் செய்யப்பட்ட பாயாசம் மிகவும் விசேஷம். அதோட போலி, வடையும் அம்மனுக்கு படைக்கப்படும். தம்பதிகளை பிரித்து வைப்பதற்கு மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆடி அம்மாவாசை

தமிழ் வருடத்தில் மூன்று அம்மாவாசை உகந்தது. அதில் முக்கியமானவை ஆடி அம்மாவாசை. இதில் குடும்பத்தில் தவறி   உள்ள முன்னோர்கள், அனைவருக்கும் திதி கொடுக்கப்படும். நீர் நிலையம் சென்று திதியை நீரில் கறைப்பதால், மக்கள்  கூட்டம் நிறைந்து காணப்படும்.

ஆடி வெள்ளி

செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆகும்.  இருப்பின், ஆடி வெள்ளி கூடுதல் சிறப்பு. ஆடி வெள்ளிக்கிழமை பக்தர்கள் கேப்பை கூழ் செய்து அம்மனுக்கு படைப்பார்கள். இதில் வெங்காயம், கருவேப்பிலை, மல்லி இலையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள். அம்மனுக்கு பிடித்த உணவான கேப்பை கூழ் ஆடி வெள்ளியன்று மிகவும் புகழ் வாய்ந்தது!

 ஆடி பூரம்

ஆண்டாள் கோவில்களில்  முக்கியமான வழிபாடுகளில் ஒன்று   - ஆடி பூரம். ஆடிப்பூரம் 10 நாள் பண்டிகையாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. இது முக்கியமாக ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பெரியாழ்வார் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் ரங்கநாதரை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, கோதை அவருக்கு மகளாக ஆடி பத்தில் கிடைத்ததால், இந்நாளை மிக சிறப்பாக தேவர்களின் திருக்கல்யாணத்துடன் கொண்டாடப்படுகிறது .  அம்மனுக்கு வளைகாப்பு நடத்த, ஏழு வகை சாதம், வளையல் வழங்குவது என்று அம்மன் கோவில்களில் சிறப்பாக இருக்கும்.

வரலக்ஷ்மி பூஜை

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை நிறைந்த பௌர்ணமியில், லக்ஷ்மி தேவியை வழிபாடு நடத்துவதே இந்த வர லட்சுமி பூஜை. இதில் கணவனின் ஆயுள் நீண்டு வாழ மனைவிகள் கடைப்பிடிக்கும் விரதம் ஆகும். இந்நாளின் பூஜை அஷ்டலட்சுமியை அதாவது செல்வம், கற்றல், அன்பு, பூமி , புகழ், வலிமை,அமைதி, இன்பம் தரும் லக்ஷ்மிகளை வழிபடுவதற்கு  சமம் ஆகும் என்று நம்புகிறார்கள்.

ஆடி பெருக்கு

ஆடி பதினெட்டு என்று கூறப்படும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடி பெருக்கு ஆகும். இந்நாள் ஆற்றங்கரை ஓரம் நீராடி பருவ மழை பொய்க்காமல்,  பொங்கி பெறுக வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்வார்கள். இந்நாள்ளில் விதைகள் விதைக்கப்படும். பயிர் வளரும் போது பருவ மழை கைகொடுத்து விவசாயம் வேளாண்மை பெருகும். புதுமண தம்பதிகள் தாலி பெருக்குவார்கள். இந்நாள் தொடங்கும் காரியம் பொங்கி பெருகும் என்று நம்புவதால்,  ஆடி பெருக்கு என்பார்கள்.

பாம்பு புத்துக்கு பால்

ஆடி மற்றும் தை மாதத்தில் பாம்பை  பெரும்பான்மையான மக்கள் வழிபாடு நடத்துவது உண்டு. பாம்பு  புற்றில் பசுப் பால் வைத்து தங்களின் நாக தோஷம் விலகும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஆடி கடைசி

இந்நாளில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை அழைக்க கணவன் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு விருந்துடன், மகளுக்கு ஆடி சீர் மற்றும் பலகாரம் வழங்க படும்.  பொதுவாக ஆடியில் கூடினால், சித்திரையில் குழந்தை பிறக்கும்.நிறை மாத கர்ப்பணி பெண்ணுக்கு சித்திரை வெயில் மிகுந்த சிரமம் தரும் என்பதால் தான் தம்பதிகளை  பிரித்து வைக்கிறார்கள்.



Leave a Comment