ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆறுகோண தீப ஆரத்தி...
ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகையில் அரோகரா...அரோகரா.. என கோஷத்துடன் அறுகோண தெப்பக்குளத்திற்கு பக்தர்கள் கைகளில் தீப ஆரத்தி காட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு காலையில் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,திருமஞ்சள் உட்பட்ட பல்வேறு வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாலையில் கோவில் மலை அடிவாரத்தின் கீழே மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறுகோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவர் சிறப்பு பூ அலங்காரம் செய்து மலையிலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து தெப்பக்குளத்தில் வைத்து ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு நாதஸ்வர வாத்தியுடன் கூடிய மங்கல தீபாரதனை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்.
பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களும் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா... அரோகரா... என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரும் கைகளில் கற்பூர தீப ஆரத்தியை தெப்பக்குளத்திற்கு காட்டி முருகரை பக்தி மனத்துடன் வழிபட்டு சென்றனர்.
Leave a Comment