திரௌபதி அம்மன் கோயில் சாட்டையடி திருவிழா...


மூக்காரெட்டிபட்டி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு  பிறகு  5 கிராம மக்கள் சேர்ந்து நடத்திய  திரௌபதி அம்மன் கோயில்  திருவிழாவில் நோய் நொடி மற்றும் பில்லி சூனியம் நீங்க சட்டை அடி  நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு  நடத்தினர்.

தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் அனைத்து சாதியை சார்ந்த  கவுண்டம்பட்டி , மூக்காரெட்டிப்பட்டி,புதுப்பட்டி, இருளப்பட்டி ,பாப்பம்பாடி ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை   திரௌபதி அம்மன் கோவில் திருவிழா  நடத்துவது வழக்கம். இந்த நிலையில்  இரண்டு  நாட்களுக்கு முன்  இத்திருவிழாவானது   கொடியேற்றத்துடன் தொடங்கி அம்மனுக்கு  பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து இன்று  கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரெளபதி அம்மன் மற்றும் பஞ்ச பாண்டவர்களான தர்மன் ,அர்ச்சுனன்,நகுலன், பீமன்,சகாதேவன் , உள்ளிட்ட சுவாமிகளை  பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஊர்வலமாக  கொண்டு சென்று வீதி உலா சென்றனர்.

மேலும் அம்மனிடம் உள்ள சாட்டையால்  பக்தர்கள் அடி வாங்கி நேர்த்தி கடன் செய்தால் நோய் நொடி மற்றும் பில்லி சூனியம் பேய் ,பிசாசுகள் ஓடும் என்பதும் சுவாமிகள் வீதி உலா வரும் போது தரையில் படுத்து  கொண்டும் ,கீழே அமர்ந்தவாறு இருக்கும் போது   அம்மனை தங்களை கடந்து சென்றால் தீராத பிரச்சினைகள் தீரும் என்பதும் குழந்தை பாக்கியம்,மற்றும் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.



Leave a Comment