திருப்பதி ஸ்ரீவாரி சேவையில் புதியமுறை
திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் செய்யும் ஸ்ரீவாரி சேவையில் புதிய முறையை தேவஸ்தானம் அமல்படுத்துகிறது. நவம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.
ஏழுமலையானுக்கு தற்போது சேவை செய்ய வரும் பக்தர்கள் ஒரு வாரம் திருமலையில் தங்கி சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, ஏழுமலையான் தரிசனம், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், 3 மற்றும் 4 நாள்கள் சேவையை தொடங்க வேண்டும் என இளைஞர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 3 மற்றும் 4 நாள்கள் சேவையை தேவஸ்தானம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், சேவை புரிய விரும்பும் இளைஞர்கள் அக்டோபர் 24 முதல் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
3 நாள்கள் சேவை: வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, வயது வரம்பு 25 முதல் 40 வரை. 4 நாள்கள் சேவை: திங்கள் முதல் வியாழக்கிழமை வரை, வயது வரம்பு- 18 முதல் 60 வரை என தேவஸ்தானம் தெரிவித்தது.
Leave a Comment