வேண்டியப்பன் மகான் மற்றும் ஏழு கன்னி தேவதைகளுக்கு திருக்குடை நன்னீராட்டு கும்பாபிஷேக விழா...


தாமரைப்பாக்கம் கிராமத்தில் சிவபெருமானின் காவலரும்  வேண்டுவோருக்கு வரம் அளிக்கும் ஸ்ரீ வேண்டியப்பன் மகான் மற்றும் ஏழு கன்னி தேவதைகளுக்கு திருக்குடை நன்னீராட்டு  கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி முழக்கத்தோடு சுவாமி தரிசனம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் வயல்வெளி நடுவே சிவபெருமானுடைய காவலரும்  வேண்டுவோருக்கு வரம் அளிக்கும் சுவாமி அருள்மிகு ஸ்ரீ வேண்டியப்பன் மற்றும் ஏழு கன்னி தேவதைகளுக்கு இன்று  திருக்குட நன்னீராட்டு  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

விழாவில் முன்னதாக காஞ்சிபுரம் செந்தமிழ் வேள்வி செய்பர் திருத் தொண்டர் மாமணி சுவாமிகள் தலைமையில் வேத பட்டாச்சாரியார்கள் பல்வேறு நதியிலிருந்து கொண்டு வந்த புனித நீரை யாகசாலை  அமைத்து கலசத்தில் ஊற்றி மங்கள இசை, சுவாமி கரிக்காலம், மகா கணபதி வேள்வி, நவகிரக பூஜை வேதபராயாணம், ஆகியவை முதல்கால யாக சாலை பூஜையில் நடந்தது பிறகு அதிகாலை இரண்டாம் யாக சாலை பூஜையில் கோபூஜை, நிறை அவிஅளித்தல், (மகாபூர்ணகுதி) திருவருள் ஏற்றம் நாடி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு ஓமங்களை யாக குண்டத்தில் வளர்த்தி யாக சாலையில் வைத்திருந்த கலசத்தை வேதபட்டாட்சியர்கள் மற்றும் கோயில் தர்மகத்தா ஆகியோர் தலையின் மீது சுமந்து கோவிலை வலம் வந்தனர் பின்னர் விமான கோபுர  கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீரை ஊற்றி திருக்குட நன்னீராட்டு அஷ்டபந்தனை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீரை கோவில் அடிவாரத்திற்கு இருந்த திரளான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து விநாயகர், லட்சுமி, ஏழு கன்னி தேவதைகள், ஆகிய கருவறையில் உள்ள சுவாமிகளுக்கு புனித ஊற்றப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த கும்பாபிஷேக விழாவில் தாமரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.



Leave a Comment