கங்கையம்மன் கோவில் திருவிழா... சாமி ஆடியபடி பக்தர்கள் பால் குட ஊர்வலம்...


வாலாஜாப்பேட்டை தக்கடி முத்தியால் தெருவில் அமைந்துள்ள கங்கையம்மன் கோவில் திருவிழாவில் பூ கரகத்தை தலையில் சுமந்து சாமி ஆடியபடி பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தக்கடி முத்தியால் தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 87-ஆம் ஆண்டு ஆனி மாத பூ கரக பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் பூ கரகத்துடன் கூடிய  கெங்கையம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம் இதே போல் இந்த ஆண்டும் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து பெண்கள் ஆண்கள் என அனைவரும் அம்மனுக்கு காப்புகட்டி விரதமிருந்து பால்குடத்தை தலையில் சுமந்தவாறு பம்பை மேளதாளம் முழங்க பூ கரகத்தை தலையில் சுமந்து சாமி ஆடியபடி சாலையில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

கோவிலை வந்தடைந்த பின்னர் விரதமிருந்த‌ பக்தர்கள் அனைவரும் தலையில் சுமந்த வந்த  பால்குடத்தை கருவறையில் இருந்த கங்கை அம்மனுக்கு சிறப்பான முறையில் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர் பிறகு பல்வேறு பூ மாலைகளாலும் மலர்களாலும் தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்த உற்சவர் கங்கையம்மன் கூடியிருந்த பக்தர்களுக்கு கம்பீரமாக ரத்தத்தில் அமர்ந்தவாறு பிரகாசமாக காட்சி அளித்து அருள் பாலித்தார். இந்த திருவிழாவில் வாலாஜாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மானை பக்தி பரவசத்துடன் வழிப்பட்டு சென்றனர்.



Leave a Comment