ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்...
அரியலூர் - காரைக்குறிச்சி ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. 25 வருடத்திற்கு முன்பு அடிகக்ல் நாட்டப்பட்ட நிலையில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கண்ணியம்மன், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தனி தனியாக கலசம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிகள் செய்ய ஊர் பொதுமக்கள் தீர்மானித்து அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை முன்னிட்டு கோவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வண்ணம் தீட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், பூர்ணாகிதி, நடைபெற்றது.
இன்று காலை இரண்டாம் கால பூஜை, மங்கல இசையுடன் தீபம் ஏற்றப்பட்டு காலை 8:30 மணிக்கு மேல் 10 மணிக்குள் யாகம் செய்யப்பட்ட புனித நீரை சிவனடியார்கள் எடுத்து கலசத்தில் ஊற்றி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியை காண காரைக்குறிச்சி சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Leave a Comment