ஏழுமலையானை தரிசிக்கும் முன் தரிசிக்க வேண்டிய பூவராக மூர்த்தி....
திருப்பதி - திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை - மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.
திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
“ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;
எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு. பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.
Leave a Comment