பூஜை செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள்?


வீட்டில் பூஜை செய்யும் பொழுது தெய்வ படங்களுக்கு பூக்களை வைக்கும் பொழுது அல்லது மாலை போடும் பொழுது கடவுளுடைய முகம் மற்றும் பாதம் எக்காரணம் கொண்டும் மறைக்க கூடாது. பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் பாதத்திலிருந்து ஆரம்பித்து தான் முகத்தை பார்க்க வேண்டும். இதனால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கு முழுமையாக எரிந்து முடியும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். தானாக தீபம் அணைய வேண்டுமே ஒழிய நாம் நம்முடைய அவசரத்திற்கு தீபத்தை அணைக்க கூடாது.

பூஜை அறையில் வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவது மங்களகரமான விஷயங்களை நடக்க செய்யும். தடைகளை அகற்றும். வெற்றிலை, பாக்கு வைக்கும் பொழுது வெற்றிலையுடைய நுனி பாகம் தெய்வத்திற்கு இடது புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முதல் முதலில் பேசும் பொழுது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பின்னர் பேச ஆரம்பிக்கலாம். எள் மற்றும் எண்ணெய் போன்றவை சனி பகவானுக்கு உரிய அம்சமாக இருக்கிறது எனவே சுபகாரியம் நடக்கும் இடங்களில் இது போன்ற வார்த்தைகளையும் அல்லது இந்த பொருட்களையோ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.



Leave a Comment