வேலாங் குளம் லட்சுமி நாராயணர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்...
மானாமதுரை வேலூர் அருகே உள்ள வேலாங் குளத்தில் லட்சுமி நாராயணர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலாங்குளம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடந்தது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் கோயில்களை நிர்மானித்துள்ளனர். அவ்வாறு மானாமதுரை அருகே வேலாங்குளத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலை அமைத்துள்ளனர்.
காலப் போக்கில் கிராமங்களில் இருந்து பலரும் வெளியேறிய நிலையில் கோயில்கள் பராமர்ப்பின்றி இருந்துள்ளன. இதே ஊரைச் சேர்ந்தவர்கள் பராமரிப்பின்றி இருந்த 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயிலை கடந்த சில வருடங்களாக புதுப்பித்து திருப்பணி வேலைகளை செய்து வந்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.
இன்று காலை 11 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சார்யார்கள் யாக சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 11.30 மணிக்கு மன்னார்குடி ராமானுஜ வாத்தியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
Leave a Comment