சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபோகம்...


சிறுவாபுரி முருகன் கோயிலில்  வள்ளி மணவாள முருகப்பெருமாள்  திருக்கல்யாண  வைபோகத்தில். ரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ந்து 6. வாருங்கள் செவ்வாய்க்கிழமை இக்கோவிலுக்கு  வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், திருமண தடை நீங்குதல், ரியல் எஸ்டேட், அரசியல் உள்ளிட்ட வேண்டுதல்கள்  நிறைவேறும்.

என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் ரூபாய் 1.கோடி மதிப்பீட்டில் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது. இதன் பின்னர் இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்  ஞாயிற்றுக்கிழமை நாளை முன்னிட்டு முருகப்பெருமான், வள்ளி,திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று

அதிகாலை  கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர், இளநீர், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம்  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆவரணங்களாலும் அலங்காரம் செய்து கா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மூலவர் வைரங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நிகழ்ச்சியின் முன்னதாக கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக கலச பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ன்னர்  மேளதாளங்கள் முழங்க வள்ளி மணவாள பெருமாள் திருக்கல்யாணம்  வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி துணைவியார் கோயிலில் 6.முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 



Leave a Comment