கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜப்பெருமாள்...
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கேவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவத்தை யொட்டி தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜப்பெருமாள்
உலகப் புகழ்பெற்றதும் அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 31-ஆம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கருட சேவை உற்சவத்தையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு,தாயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆனது நடைபெற்று மலையிலிருந்து சாமி எழுந்தருளச்செய்யப்பட்டது.
அதன் பின் தங்க கருட வாகனத்தில் பல்வேறு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு,பட்டு உடுத்தி,திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வரதராஜப்பெருமாள் எழுந்தருள சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு தங்க கருட வாகனத்தில் காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகளில் பொது மக்கள் பகதர்கள் வெள்ளத்திற்கு மத்தியிலே வீதி உலா வந்து வரதராஜப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
இந்த கருடசேவை உற்சவத்தினை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான மக்கள் வழிநெடுகிலும் காத்திருந்து கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜப்பெருமாளுக்கு கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து மனமுருகி வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கருட சேவை உற்சவத்தைக்காண வருகை தந்த பொதுமக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர்,மோர்,அன்னதானங்களும் பலதரப்பினர் சார்பில் வழங்கப்பட்டது.
கருட சேவை உற்ச்சவத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் பல நூற்றுக்கணக்கான போலீசார் காஞ்சிபுரம் மாநகர் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும், எவ்வித குற்ற செயல்களும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே சிசிடிவி காண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும்,மக்கள் கூட்டம் கூடும் அதிக கூட்ட நெரிடல் பகுதிகளில் உயர் கூண்டுகள் அமைத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Leave a Comment