அக்னி வசந்த விழாவில் அம்மன் கரகத்துடன் தீயில் இறங்கிய பக்தர்கள்...


சக்கரமல்லூர் கிராமத்தில் அக்னி வசந்த விழாவில் அம்மன் கரகத்துடன் தீயில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாமாரூக்மணி ஸமேத வேணுகோபால் திருக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 4-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு மாலை வேலையில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடக கலைஞர்கள் மூலமாக தெருக்கூத்து நிகழ்வுகள் நடைபெற்று வந்தன..

இந்த நிலையில் இன்று காலை கோவில் அருகே உள்ள மைதானத்தில் 100 அடி நீளமுள்ள துரியோதனனன் சிலையை களிமண்ணால்  வடிவமைத்து பீமன், துரியோதனன் சண்டையிடும் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலையில் தீமிதி விழாவின் போது கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் சுவாமிக்கு   விரதமிருந்தும் ,மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு பக்தியுடன் தீயில் கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா.. என விண்ணை அதிரும்படி பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்துடன் தீயில் இறங்கி தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.



Leave a Comment