முருகப் பெருமானின் கதைகளை பாடி பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி...


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முருகப் பெருமானின் கதைகளை பாடி  பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் கதைகளை பாடல்களாக பாடி ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமியரும் அழகுற நடனமாடும் கலை வள்ளி கும்மி நடன கலை ஆகும். கொங்கு சமுதாய மக்களால் பெரிதும் போற்றப்படும் இந்த நடனகலையை மீட்டு எடுக்கும் முயற்சியில் பல்வேறு பகுதிகளில் நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு பெருந்துறை கொங்கு பள்ளியில் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான சிறுவர் சிறுமியரும் பெண்களும் பங்கேற்று வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

முருகப் பெருமானின் கதைகளை பாடி அதற்கேற்ப பெண்கள் அழகுற நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 



Leave a Comment