ஸ்ரீ த்ரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா...
கலவை அருகே தபசு மரம் ஏறும் விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை கேட்ட பெண்கள் - எலுமிச்சம் பழம் வீசி குழந்தை வரம் கொடுத்த அர்ஜுனன்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள கே.வேளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ த்ரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருவதோடு நாடக கலைஞர்களால் நாள்தோறும் மகாபாரதத்தின் கதையை எளிய முறையில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வேடம அணிந்து நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த அக்னி வசந்த் விழாவில், பாஞ்சாலிக்கு சுபத்திரை திருக்கல்யாணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமானிடம் அர்ஜுனன் ஐந்து ஆயுதங்களான சிவாஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபதம் அஸ்திரம், பிரத்தீங்கா அதிஸ்திரம், யோமாஸ்திர என ஆயுதங்களை பெற 60 அடி உயரம் கொண்ட தபசு மரத்தில் ஒவ்வொரு அடிக்கு ஒவ்வொரு பாடல் பாடி தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் குழந்தை வரம் வேண்டி தபசு மரத்தில் தொட்டில் கட்டி கருங்கல் வைத்து தாலாட்டி ஈரத்துணியுடன் விரம் இருந்து பெண்களுக்கு தபசு மர ஊச்சியில் சென்ற அர்ஜூனன் வேடமனிந்த நாடக கலைஞர் ஒருவர் அங்கிருந்து எலும்பிச்சை பழம் போட அதனை பெண்கள் மடியை ஏந்தி பெற்றுக் கொண்டு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர்.
இந்த அக்னி வசந்த விழாவில் கலவையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் உள்ளூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Leave a Comment