தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீக்கும் சனீஸ்வரர் சன்னதி...
திருநள்ளாறு;
ஜாதகப்படி 7 12 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கும்.
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 12 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹாத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.
வழித் தடம்; தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி நடைபெறும் காலங்களிலும்சனி திசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும்.
வழித் தடம்;
சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்;
சனி பாதிப்புள்ளவர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்ரு, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.
வழித் தடம்; மதுரை மேலூர் சாலையில் உள்ளது.
ஸ்ரீ வைகுண்டம்;
மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதையும் கெட்டதையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.
திருநல்லாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்
வழித் தடம்;திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு. பலிபீடமும், காகவாகனமும் கொண்டது சனீஸ்வரரின் தனிச்சிறப்பு.
தம்பதி சமேதராய் மட்டுமல்ல, இவ்வாலயத்தில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.
வழித் தடம்; கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்கு பக்கத்தில் திருநாரையூர் உள்ளது.
Leave a Comment