தோஷங்கள் நீக்கும் புதன் தளம்.... நற்பலன் தரும் குரு தளம்...
புதன்:
திருவெண்காடு; குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையிலுள்ளது.
குரு:
ஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
வழித் தடம்; கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது.
தென்குடி திட்டை; அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.
வழித் தடம்; தஞ்சாவூர்- திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையில் உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும்.
வழித் தடம்; ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ- நல்லூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.
Leave a Comment