24 வகை சக்திகள் தரும் அனைவருக்கும் பொதுவான காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

தத் - வெற்றி
ச - வீரம்
வி - பராமரிப்பு
து - நன்மை
வ - ஒற்றுமை
ரி - அன்பு
நி - பணம்
யம் - அறிவு
ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம்
த்தி - அழுத்தம்
வா - பக்தி
ஸ்யா - நினைவாற்றல்
ஃத்தி - மூச்சு
மா - சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் - சேவை

காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.



Leave a Comment