வாலாஜாபேட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய திருவோண சிறப்பு வழிபாடு...
சித்திரை மாத திருவோணத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உற்சவர் ஆனந்த நடராஜரை பார்த்து பக்தர்கள் நமச்சிவாய.. நமச்சிவாய.. என பக்தி கோஷங்களோடு சிறப்பு வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை டீரங்க் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள, உற்சவர் சிவகாமி அம்பிகை சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு ஆண்டுக்கு ஆறு முறை, சித்திரை திருவோண நட்சத்திரம், ஆனி உத்திர நட்சத்திரம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம், ஆவணி சதுர்த்தி, புரட்டாசி சதுர்த்தி, மாசி சதுர்த்திதி ஆகிய காலங்களில் சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
அதன்படி, சித்திரை மாத திருவோண நட்சத்திர அபிஷேகத்தை தொடர்ந்து இன்று இரவு கோவிலில் உற்சவ நடராஜருக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பல்வேறு வகையான பூ மலர்கள், 108 சங்க அபிஷேகம், உள்ளிட்ட 50 வகையான திரவியங்கள் மற்றும் பஞ்சலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி கோவில் முழுவதும் வலம் வந்து வேத மந்திரங்கள் மேளதாளம் முழங்க தீபாராதனை காண்பித்த பின்னர் நடராஜர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பல்வேறு வகையிலான சோட உபச்சாரங்கள் செய்யப்பட்டு பஞ்சலோக மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த சித்திரை மாத திருவோண நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய... நமச்சிவாய...சிவாய நம.. சிவாய நம... என விண் அதிரியபடி வேதமந்திரங்கள் முழங்கியவாறு சுவாமியை பக்தி பரவசத்தோடு வழிப்பட்டு சென்றனர்.
Leave a Comment